Translate

இந்த வலைப்பதிவில் தேடு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய் மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

மேட்டூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய் மகன் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனுரைச் சேர்ந்த மூர்த்தி (52). இவரது மனைவி அன்னபூரணி (40), மகன் மைதீஷ் (12) ஆகிய மூவரும் நேற்று மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்துவிட்டு மாலையில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மேச்சேரி அருகே உள்ள குள்ளமடையானூர் அருகே வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மேட்டூர் சுப்பராய நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (50) என்பவர் வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அன்னபூரணியும் அவரது மகன் சுதீஷ் ஆகியோர் கீழே விழுந்தனர்.

image

அப்போது இவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கார் உள்ளிட்ட கனரக வாகன சக்கரத்தில் சிக்கி உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மூர்த்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். எதிரே வந்த ராஜேந்திரன் பலத்த காயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்து போன மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/147956/Two-wheeler-head-on-collision-3-killed--including-mother-and-son.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post