விளாத்திகுளம் அருகே தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்கு செவல் பகுதியைச் சேர்ந்தவர் இராமநாதன் (38) பனையேறும் தொழில் செய்து வரும் இவரும், இவரின் உடன் பிறந்த தம்பி சேதுராமன் (36) என்பவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் வளர்த்து வந்த ஆடு ஒன்று உயிரிழந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஆட்டை இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர். விற்பனை செய்த பணத்தில் பங்கு பிரித்துக் கொள்வதில் சகோதரர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து சேதுராமன் வீட்டிற்குச் சென்று தூங்கியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ராமநாதன் வீட்டிலிருந்து இரும்புக் கம்பியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தனது தம்பி சேதுராமனை தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில், சேதுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த சூரங்குடி போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ராமநாதனை தேடி வருகின்றனர். பணம் தான் பிரச்னையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/147952/Trouble-in-sharing-money-grief-caused-by-brother-to-brother.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post