அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் செல்ல பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வருமாறு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதிமுக அலுவலகத்திற்குச் செல்ல பாதுகாப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிபி பிரபாகரன் காவல்துறையினரை சந்தித்து மனு அளித்திருந்தார். இந்த மனு குறித்து காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அதிமுக அலுவலகத்திற்கு செல்ல அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று வந்தால், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர், அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. .
இதையும் படிக்க: மீண்டும் விசாரணை பிடிக்குள் வருகிறார் செந்தில் பாலாஜி... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146911/The-police-have-explained-that-they-have-obtained-permission-from-the-court-to-provide-security-for-Panneerselvam-to-enter-the-AIADMK-office.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post