திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். தொழிலாளியான இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் 2 வயது குழந்தை சூபியன் டிவி வைத்திருந்த ஸ்டாண்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே அலறி அடித்துக் கொண்டு உள்ளே வந்து பார்த்தபோது குழந்தையின் தலையில் டிவி விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இரண்டு வயது குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149122/A-2-year-old-child-who-was-playing-at-home-was-tragically-killed-when-a-TV-fell-on-him.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post