கடலூரில் நடைபெற்ற 'ஜெயிலர்' படப்பிடிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யாகிருஷணன் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் - புதுச்சேரி அருகே அழகியநத்தம் தென்பெண்ணையாற்று பாலம் அருகே நேற்று நடைபெற்றது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்றபோது புதுச்சேரி எல்லையில் ரஜினிக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர் அப்போது காரின் கண்ணாடியை திறந்த ரஜினி ரசிகர்களுக்கு கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149121/Rajini-went-to-shoot-Jailer-Puducherry-fans-welcomed-him-enthusiastically.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post