Translate

இந்த வலைப்பதிவில் தேடு

`என்னையவா கடத்தப்பாக்குறீங்க?!’- ட்விஸ்ட் வைத்து சாமர்த்தியமாக தப்பித்த சென்னை சிறுவன்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்டிருக்கிறார். தனது துரித நடவடிக்கையால், சிறுவன் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

சென்னை கொண்டித்தோப்பில் வசித்து வருபவர் அரவிந்த் சர்மா. தொழிலதிபரான இவரது மகன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு புறப்பட்ட மாணவனை மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் கடத்தியுள்ளார்.

image

அந்த ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்றபோது, அதிலிருந்து தப்பித்த சிறுவன், பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளே புகுந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு இருந்த காவலரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

image

உடனடியாக மாணவனின் தந்தை அரவிந்த சர்மாவிற்கு தகவல் தெரிவித்த காவலர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாணவனை தந்தையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அரவிந்த ரமேஷ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் மாணவனை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/149739/Chennai-student-escapes-skillfully.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post