“வெளியேறு வெளியேறு... எடப்பாடியே அதிமுக விட்டு வெளியேறு” என உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவினர் பல அணிகளாக பிரிந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி வசம் தற்போது வந்துள்ளது அதிமுக. இந்நிலையில் இடைகால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அதிமுக.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், “வெளியேறு வெளியேறு... தலைமை பதவிக்கு தகுதி இல்லாத நயவஞ்சக நம்பிக்கை துரோகி எடப்பாடியே அதிமுக விட்டு வெளியேறு. உனக்கு துதிபாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குரிய இந்த போஸ்டரால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/156563/OPS-supporters-Controversy-posters-against-EPS.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post