திறன் அறிவோம்
பலவுள் தெரிக
இயல் - 1
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
விடை : இ) எம் + தமிழ + நா
2. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள்.
- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
விடை : ஈ) சருகும் சண்டும்
3. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________.
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
விடை : ஆ) மணி வரைக
4. `மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
விடை : அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும்காப்பியங்களும்
5. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ______ .
அ) பாடிய ; கேட்டவர்
ஆ) பாடல் ; பாடிய
இ) கேட்டவர் ; பாடிய
ஈ) பாடல் ; கேட்டவர்
விடை : ஈ) பாடல் ; கேட்டவர்
இயல் - 2
1. செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 : காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1,3 ஆகியன சரி
விடை : ஈ) செய்தி 1,3 ஆகியன சாp
2. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க!
1. கொண்டல் - மேற்கு
2. கோடை - தெற்கு
3. வாடை - கிழக்கு
4. தென்றல் - வடக்கு
அ) 1 2 3 4
ஆ) 3 1 4 2
இ) 4 3 2 1
ஈ) 3 4 1 2
விடை : ஆ) 3 1 4 2
3. ‘’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’’
- பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
ஆ) மோனை, எதுகை
இ) முரண், இயைபு
ஈ) உவமை, எதுகை
விடை : ஆ) மோனை, எதுகை
4. ‘’பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல்
ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
விடை : அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
5. ‘பொரிய மீசை’ சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை : அ) பண்புத்தொகை
இயல் - 3
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
விடை : இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
2. ‘விருந்தினரைப் பேவணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறுநானு}று. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை ?
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
விடை : ஆ) இன்மையிலும் விருந்து
3. காசிக் காண்டம் என்பது ______
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்.
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
விடை : இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
4. ‘’சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’’ என்னும் அடியில் பாக்கம் என்பது ______.
அ) புத்தூர்
ஆ) மூதூர்
இ) பேரூர்
ஈ) சிற்றூர்
விடை : ஈ) சிற்றூர்
5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல், ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
விடை : அ) வேற்றுமை உருபு
இயல் - 4
1. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது
விடை : அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன
2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா
ஆ) சீலா
இ) குலா
ஈ) இலா
விடை: ஈ) இலா
3. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ - யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்.
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவாரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
விடை : ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
4. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
விடை : ஈ) வானத்தையும் பேராலியையும்
5. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். ‘பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார்’ ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இடவழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
விடை : இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
இயல் - 5
1. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
விடை : அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
2. அருந்துணை என்பதைப் பிரித்தால் ________.
அ) அருமை + துணை
ஆ) அரு + துணை
இ) அருமை + இணை
ஈ) அரு + இணை
விடை : அ) அருமை + துணை
3. ‘’அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை’’
– என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்
ஆ) அறிவியல்
இ) கல்வி
ஈ) இலக்கியம்
விடை : இ) கல்வி
4. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _____. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _____.
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
விடை : : மன்னன், இறைவன்
5. ‘’இங்கு நகரப் பேருந்து நிற்குமா’’? – என்று வழிப்போக்கர் கேட்டது ______ வினா.
‘’அதோ, அங்கே நிற்கும்’’ என்று மற்றொருவர் கூறியது _____ விடை
அ) ஐயவினா, வினாஎதிர் வினாதல்
ஆ) அறிவினா, மறைவிடை
இ) அறியாவினா, சுட்டுவிடை
ஈ) கொளல் வினா, இனமொழி விடை
விடை : இ) அறியாவினா, சட்டுவிடை
இயல் - 6
1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
விடை : இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தில் வேறு வேறு வடிவங்கள் யாவை?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
விடை : ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
3. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால்
ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால்
ஈ) காம்பு முறிந்தால்
விடை : ஆ) தளரப் பிணைத்தால்
4. பிள்ளைத் தமிழ் பருவத்திற்குப் ______ பாடல்களால் பாடப்பெறும்.
அ) இருபது
ஆ) பத்து
இ) ஐம்பது
ஈ) முப்பது
விடை : ஆ) பத்து
5. பிள்ளைத் தமிழ் ______ பாடல்களைக் கொண்டிருக்கும்.
அ) ஐம்பது
ஆ) எழுபது
இ) எண்பது
ஈ) நூறு
விடை : ஈ) நூறு
6. குழை ______ அணியும் அணிகலனாகும்.
அ) காலில்
ஆ) கையில்
இ) காதில்
ஈ) நெற்றியில்
விடை : இ) காதில்
7. நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர் ______.
அ) கபிலர்
ஆ) குமரகுருபரர்
இ) பரணர்
ஈ) ஒளவையார்
விடை : ஆ) குமரகுருபரர்
8. குமரகுருபரரின் காலம் ______ நூற்றாண்டு
அ) 15 ஆம்
ஆ) 17 ஆம்
இ) 12 ஆம்
ஈ) 13 ஆம்
விடை : ஆ) 17 ஆம்
9. செங்கீரைப் பருவம் குழந்தையின் ______ ஆம் மாதங்களில் பாடப்படுவதாகும் .
அ) 5, 6
ஆ) 2, 3
இ) 7, 8
ஈ) 9, 10
விடை : ஆ) 2, 3
10. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்? ______
அ) குமரகுருபரர்
ஆ) முத்துக்குமாரசாமி
இ) மீனாட்சி சுந்தரனார்
ஈ) செய்கு தம்பி பாவலர்
விடை : அ) குமரகுருபரர்
11. கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை இயற்றியவர் ______
அ) குமரகுருபரர்
ஆ) முத்துக்குமாரசாமி
இ) மீனாட்சி சுந்தரனார்
ஈ) செய்கு தம்பி பாவலர்
விடை : அ) குமரகுருபரர்
12. குழந்தையின் தலை அசைத்தலுக்குச் சந்தம் அமைத்துத் தருவது ______
அ) கலம்பகம்
ஆ) பிள்ளைத் தமிழ்
இ) குறவஞ்சி
ஈ) உலா
விடை : ஆ) பிள்ளைத் தமிழ்
13. ‘பைம்பொன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு ______
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை : அ) பண்புத்தொகை
14. ‘சூழி என்பது’ ______
அ) காலில் அணிவது
ஆ) நெற்றியில் அணிவது
இ) தலையில் அணிவது
ஈ) காதில் அணிவது
விடை : இ) தலையில் அணிவது
15. பிள்ளைத்தமிழ் பாடுவதில் முன்னோடி ______
அ) பெரியாழ்வார்
ஆ) குமரகுருபரர்
இ) உமறுப்புலவர்
ஈ) திரிகூடராசப்பகவிராயர்
விடை : அ) பெரியாழ்வார்
16. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
விடை : ஈ) அங்கு வறுமை இல்லாததால்
17. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்_________
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
விடை : இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
18. ‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரியாம்கண்ட தில்’ → இக்குறளில் பயின்று வரும் அணி
அ) சொற்பொருள் பின்வரும் நிலையணி
ஆ) உவமையணி
இ) வஞ்சகப் புகழ்ச்சி அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமையணி
விடை : ஆ) உவமையணி
19. ‘’பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்’’ → இக்குறளில் காணப்படும் நயங்கள்
அ) அடி எதுகை, அடி மோனை
ஆ) சீர் மோனை, முரண்
இ) முரண், சீர் எதுகை
ஈ) இயைபு, முரண்
விடை : அ) அடி எதுகை, அடி மோனை
20. ஒருவருக்கு அறத்தையும் இன்பத்தையும் தருவது _______
அ) பொருளல்ல தில்லை பொருள்
ஆ) எஃகதனிற் கூரிய தில்
இ) நீள் வினையால் நீளும் குடி
ஈ) தீதின்றி வந்த பொருள்
விடை : ஈ) தீதின்றி வந்த பொருள்
21. தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செயலைச் செய்வதற்கு வள்ளுவர் காட்டிய உவமை _______
அ) குன்றேறி யானைப் போர் காண்பது
ஆ) சுற்றமாகச் சுற்றும் உலகு
இ) மக்களே போல்வர், கயவர்
ஈ) கரும்பு கொல்லப் பயன்படும்
விடை : அ) குன்றேறி யானைப் போர் காண்பது
இயல் - 7
1. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது _________.
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
விடை : ஈ) சிலப்பதிகாரம்
2. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே.
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை : அ) திரும்பதியும் திருத்தணியும்
3. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண், ஏர், மாடு
ஆ) மண், மாடு, ஏர், உழவு
இ) உழவு, ஏர், மண், மாடு
ஈ) ஏர், உழவு, மாடு, மண்
விடை : இ) உழவு, ஏர், மண், மாடு
4. ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ - என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
விடை : ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
5. ‘ஓசுநர்’ - பொருள் தெரிக
அ) அப்பம் சுடுவோர்
ஆ) கள்விற்போர்
இ) எண்ணெய் விற்போர்
ஈ) ஓவியர்
விடை : இ) எண்ணெய் விற்போர்
6. சிலப்பதிகாரம் செப்பும் வணிக நகரம் ______
அ) பூம்புகார்
ஆ) சிறுகுடி
இ) மருவூர்ப் பாக்கம்
ஈ) மதுரை
விடை : இ) மருவூர்ப் பாக்கம்
7. விரை என்பதன் பொருள் ______
அ) மனம்
ஆ) மணம்
இ) கற்பகம்
ஈ) சோலை
விடை : ஆ) மணம்
8. சிலப்பதிகாரத்தில், இந்திரவிழா ஊரெடுத்த கதை அமைந்துள்ள காண்டம் ______.
அ ) விஞ்சிக்காண்டம்
ஆ) புகார்க்கண்டம்
இ) மதுரைக்காண்டம்
ஈ) நுபுவ்வத்துக்காண்டம்
விடை : ஆ) புகார்க்கண்டம்
9. மூவெந்தர் பற்றிய செய்திகளைக் கூரும் நூல் _______
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமெகலை
இ) சீவகச் சிந்தாமணி
ஈ) குண்டலகெசி
விடை: அ) சிலப்பதிகாரம்
10. சிலப்பதிகாரம் _______ காண்டங்களையும் _______ காதைகளையும் கொண்டது
அ) 30, 3
ஆ) 4, 40
இ) 3, 30
ஈ) 6, 11
விடை : இ) 3, 30
11. இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை _______ , _______.
அ) வளையாபதி, குண்டலகேசி
ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி, வளையாபதி
ஈ) சிலப்பதிகாரம், குண்டலகேசி
விடை : ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை
12. இளங்கோவடிகள் _______ மரபைச் செர்ந்தவர்.
அ) செர
ஆ) சோழ
இ) சமண
ஈ) பௌத்த
விடை : அ) செர
13. ‘’ முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக'' என்றவர் ________
அ) திருத்தக்கத்தேவர்
ஆ) இளங்கோவடிகள்
இ) நாதகுத்தனார்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
விடை : சீத்தலைச்சாத்தனார்
14. ‘’நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’’ என்றவர் _______
அ) திருத்தக்கத்தேவர்
ஆ) இளங்கோவடிகள்
இ) நாதகுத்தனார்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
விடை : ஆ) இளங்கோவடிகள்
15. ‘’நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’’ என்று பாடியவர் _______
அ) கவிமணி
ஆ) பாரதிதாசன்
இ) பாரதியார்
ஈ) நாமக்கல் கவிஞர்
விடை : இ) பாரதியார்
16. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிய போரிடுவதன் காரணம் _______
அ) நாட்டைக் கைப்பாற்றம்
ஆ) ஆநிரைக் கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
விடை : வலிமையை நிலைநாட்டல்
இயல் - 8
1. மேன்மை தரும் அறம் என்பது ______.
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
விடை : அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
விடை : ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
3. ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது _______.
அ) காலம் மாறுவதை
ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை
ஈ) வண்ணம் பூசுவதை
விடை : இ) இடையறாது அறப்பணி செய்தலை
4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் _______.
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
விடை : அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ______.
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
விடை : அ) அகவற்பா
இயல் - 9
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.
அ) அரசின் நலத்திட்ட ங்களைச் செயல்படுத்தல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
விடை : ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது.
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
விடை : ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
3. ‘இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்’ - இவ்வடிகளில் கற்காலம் என்பது
அ) தலைவிதி
ஆ) பழைய காலம்
இ) ஏழ்மை
ஈ) தலையில் கல் சுமப்பது
விடை : ஈ) தலையில் கல் சுமப்பது
4. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று ______ வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
விடை : ஈ) எலிசபெத், பூமிக்காக
5. வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி _________
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம்
விடை : இ) உருவகம்
- Synonyms Questions and Answers
- Antonyms Questions and Answers
- Singular - Plural Questions and Answers
- Prefix - Suffix Questions and Answers
- Abbreviations Questions and Answers
- Phrasal verbs / Idioms and Phrases Questions and Answers
- Compound Words Questions and Answers
- 10 English Grammar – Tenses
- 10th English Grammar - Linkers
- Active Voice and Passive Voice
- Direct - Indirect Speech
- Punctuation Exercise
- Simple, Compound and Complex Sentences Exercises
- Rearrange Jumbled Sentences
- Sentences in coherent order
- 10 English Supplementary
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post